/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை அணையில் இருந்து ஜூன் 15ல் பாசன நீர் திறப்பு வைகை அணையில் இருந்து ஜூன் 15ல் பாசன நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து ஜூன் 15ல் பாசன நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து ஜூன் 15ல் பாசன நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து ஜூன் 15ல் பாசன நீர் திறப்பு
ADDED : ஜூன் 07, 2025 01:25 AM
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூன் 15ல் நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. சில மாதமாக பெய்த மழையால் வைகை அணையில் கணிசமான நீர் இருப்பு உள்ளது. நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூன் மாதமும், 2ம் போகத்திற்கு செப்டம்பரில் தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு பருவத்தில் ஜூன் 15ல் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரில் குறிப்பிட்ட அளவு வைகை அணையில் சேர்கிறது. பெரியாறு, வைகை அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி.,யாகும்போது வைகை அணையில் இருந்து முதல் போகத்திற்கு நீர் திறக்கப்படும். தற்போது இரு அணைகளின் நீர் இருப்பு 5.6 டி.எம்.சி.,யாக உள்ளது. ஜூன் 15 க்குள் இருப்பின் அளவு உயர்ந்து விடும். நீர் திறந்து விடுவதற்கான அரசாணை இன்னும் வரவில்லை என்றனர்.
நேற்று அணை நீர்மட்டம் 58.53 அடியாக இருந்தது( மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1204 கன அடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.