Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ரோட்டில் கொண்டாட்டம் கத்திக்குத்தில் ஒருவர் கைது

ரோட்டில் கொண்டாட்டம் கத்திக்குத்தில் ஒருவர் கைது

ரோட்டில் கொண்டாட்டம் கத்திக்குத்தில் ஒருவர் கைது

ரோட்டில் கொண்டாட்டம் கத்திக்குத்தில் ஒருவர் கைது

ADDED : ஜன 03, 2024 07:06 AM


Google News
பெரியகுளம்: ஆங்கில புத்தாண்டில் ரோட்டில் டூவீலருக்கு வழிவிடாமல் கொண்டாடி இடையூறு செய்தவரை தட்டி கேட்டவருக்கு கத்தி குத்து விழுந்தது.

பெரியகுளம் வடகரை காந்தி நகரைச் சேர்ந்தவர் மைக்செட் அமைப்பாளர் ஹரி கிருஷ்ணன் 19. இவரது தம்பி பாலாஜி 17. நண்பர்கள் ஆனந்தகுமார் 19. பிரவீன் 19. ஆகியோர் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அழகர்சாமிபுரத்தில் மைக் செட் அமைக்கும் பணி முடிந்து, டூவீலரில் மைக் செட்டை கட்டிக்கொண்டு ஆனந்தகுமார் மெதுவாக ஓட்டி வர, மற்றவர்கள் நடந்து வந்தனர். புதுபஸ்ஸ்டாண்ட் அருகே வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது 25, தனது நண்பர்களுடன் ஜன.1 அதிகாலை 12:30 மணிக்கு ரோட்டை மறித்து கேக் வெட்டி ஆடிக் கொண்டிருந்தனர். ஆனந்தகுமார் வழிவிடுமாறு டூவீலரில் ஹாரன் அடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஷீர்அகமது, ஆனந்தகுமாரை அவதூறாக பேசினார். உடன் வந்த ஆனந்தகுமார் நண்பர்கள் ஏன் இப்படி பேசுறீங்க என்றனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஷீர் அஹமது, ஆனந்தகுமாரை அடித்து கத்தியால் குத்தினார்.

காயமடைந்த ஆனந்தகுமார் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடகரை எஸ்.ஏ ராஜசேகர், பஷீர் அகமதை கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us