ADDED : ஜன 15, 2024 04:05 AM
கூடலுார் : கூடலுார் கருணாநிதி காலனியில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் நேற்று மாலை ரோடு மறியலில் ஈடுபட்டனர். பொங்கல் விழாக் காலங்களில் குடிநீரின்றி பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். மாநில நெடுஞ்சாலையில் நடந்த இந்த ரோடு மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


