/உள்ளூர் செய்திகள்/தேனி/ டிரான்ஸ்பார்மர் வெடித்து 6 நாட்களாக சீரமைக்காததால் காயும் நெற்பயிர்கள் டிரான்ஸ்பார்மர் வெடித்து 6 நாட்களாக சீரமைக்காததால் காயும் நெற்பயிர்கள்
டிரான்ஸ்பார்மர் வெடித்து 6 நாட்களாக சீரமைக்காததால் காயும் நெற்பயிர்கள்
டிரான்ஸ்பார்மர் வெடித்து 6 நாட்களாக சீரமைக்காததால் காயும் நெற்பயிர்கள்
டிரான்ஸ்பார்மர் வெடித்து 6 நாட்களாக சீரமைக்காததால் காயும் நெற்பயிர்கள்
ADDED : ஜூன் 13, 2025 03:12 AM

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் மின் டிரான்ஸ்பார்மர் வெடித்து 6 நாட்களாகியும் சீரமைக்காததால் நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது.
தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் நுழைவுப்பாதையில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் தாமரைக்குளம் புரவு விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
300 ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. ஜூன் 6ல் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்தடை ஏற்பட்டது. மறுநாள் தாமரைக்குளம் புரவு விவசாயிகள் சங்கத்தினர் கல்லூரி விலக்கில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது சரிசெய்ய கோரிக்கை வைத்தனர். ஜூன் 7 ல் ஆய்வு செய்த மின்துறை பணியாளர்கள் நேற்று வரை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் விவசாயப் பணிக்கு மின் மோட்டார் இயக்க முடியாததால் வயலில் 30 நாட்கள் ஆன நெற் பயிர்கள் காய்ந்து வருகிறது.
விவசாயிகளிடம் விரைவில் சீரமைப்பதாக கூறி தலா ரூ.ஆயிரம் வீதம் 10 பேரிடம் பணியாளர்கள் பணம் வசூலித்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.