/உள்ளூர் செய்திகள்/தேனி/கருவூல கணக்குத்துறையில் 'களஞ்சியம் 2.0' சாப்ட்வேர்கருவூல கணக்குத்துறையில் 'களஞ்சியம் 2.0' சாப்ட்வேர்
கருவூல கணக்குத்துறையில் 'களஞ்சியம் 2.0' சாப்ட்வேர்
கருவூல கணக்குத்துறையில் 'களஞ்சியம் 2.0' சாப்ட்வேர்
கருவூல கணக்குத்துறையில் 'களஞ்சியம் 2.0' சாப்ட்வேர்
ADDED : ஜன 03, 2024 01:12 AM
தேனி:தமிழக கருவூல கணக்குத்துறையின் ஐ.எப். எச்.ஆர்.எம்.எஸ்., சாப்ட்வேர் புதுப்பிக்கப்பட்டு 'களஞ்சியம் 2.0' என்ற பெயரில் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் 9.20 லட்சம் பேர், ஓய்வூதியர்கள் 7 லட்சம் பேருக்கான மாத சம்பளம், ஓய்வூதியம் மற்ற பணபரிவர்த்தனைகள் கருவூலம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கருவூலத்துறையினர் பணப் பரிமாற்றத்திற்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது விரைவாக செயல்படாததால் பண பரிமாற்றம் பதிவேற்றம் தாமம் ஆனது. இதனால் பணியாளர்கள் இரவு பணி செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனை மாற்றம் செய்து புதுப்பிக்க கருவூல கணக்குத்துறையினர் மட்டுமின்றி, பிறதுறை அலுவலர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில் இந்த சாப்ட்வேர் பயன்பாடு டிச., 22 முதல் டிச.,31 வரை நிறுத்தப்பட்டது. நேற்று (ஜன.,2) முதல் களஞ்சியம் 2.0 என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்ட சாப்ட்வேர் பயன்பாட்டிற்கு வந்தது.
கருவூல கணக்குத்துறையினர் கூறுகையில், 'முன்னர் இருந்த சாப்ட்வேரை விட புதிய சாப்ட்வேர் விரைவாக செயல்படுகிறது. இதனுடன் இணைக்கப்பட்ட செயலியை அரசு அலுவலர்கள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தனி பயனாளர் முகவரி, பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி அவர்கள் பே சிலிப், சர்வீஸ் ரிஜிஸ்டர் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என்றனர்.