/உள்ளூர் செய்திகள்/தேனி/நீர்க்கசியும் தொட்டிப் பாலத்தில் மணல் மூடைகள் அடுக்கி சீரமைப்புநீர்க்கசியும் தொட்டிப் பாலத்தில் மணல் மூடைகள் அடுக்கி சீரமைப்பு
நீர்க்கசியும் தொட்டிப் பாலத்தில் மணல் மூடைகள் அடுக்கி சீரமைப்பு
நீர்க்கசியும் தொட்டிப் பாலத்தில் மணல் மூடைகள் அடுக்கி சீரமைப்பு
நீர்க்கசியும் தொட்டிப் பாலத்தில் மணல் மூடைகள் அடுக்கி சீரமைப்பு
ADDED : ஜன 01, 2024 06:08 AM
கூடலுார்: பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொட்டிப் பாலத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதால் மணல் மூடைகள் அடுக்கி நீர்வளத் துறையினர் தற்காலிமாக சீரமைத்தனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் தம்மணபட்டி அருகே உள்ள தொட்டிப் பாலம் வழியாக வெளியேறும். டிச 19ல் இக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்ட பின் தொட்டி பாலத்தின் துவக்க பகுதிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டது.
இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி சீரமைக்கும் பணியில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக இப்பணி நடந்த போதிலும் தொடர்ந்து நீர்க் கசிவு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அதனால் 18-ம் கால்வாயில் நீர் நிறுத்தப்பட்ட பின் நிரந்தரமாக சீரமைப்பு பணிகள் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஒட்டான்குளம் கண்மாய்க்கு செல்லும் கூட்டாறு பாலம் உடைந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்க வில்லை. இதனால் ஒட்டான்குளம் கண்மாய்க்கு மாற்றுப் பாதையில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.