/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணிகம்பத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி
கம்பத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி
கம்பத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி
கம்பத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி
ADDED : ஜன 01, 2024 06:09 AM
கம்பம்; 'கம்பம் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் அகற்ற உள்ளோம்.' என, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக தினமும் கம்பம் வருகின்றனர். எனவே கம்பம் நகர் மெயின்ரோடு, கம்பமெட்டு ரோடு, வேலப்பர் - கோயில் வீதி, காந்திஜி வீதி, பார்க் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு உள்ளிட்ட பல வீதிகள் பொது மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் கடைக்காரர்கள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், நகை கடைகள் தங்களின் விளம்பரப் பலகைகளை ரோட்டிற்கே கொண்டு வந்து வைத்து விடுகின்றனர். ரோட்டை ஆக்கிரமித்து கடை படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இதனால் மெயின்ரோடு நெருக்கடியில் சிக்கி உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை முறைப்படி அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்கின்றன. கடந்த மாதமே நெடுஞ்சாலைத் துறை கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எனவே தற்போது ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகள் தயாராகி விட்டனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜா கூறுகையில், 'கம்பம் மட்டுமே ஆக்கிரமிப்பில் முதலிடம் வகிக்கிறது. கடந்த மாதமே நோட்டீஸ் வழங்கி விட்டோம். விரைவில் கம்பம் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.', என்றார்.