ADDED : பிப் 24, 2024 06:05 AM

போடி : போடி நகராட்சி பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் சின்ன சவுடம்மன் கோயில் தெரு, டி.வி.கே.கே., நகரில் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், மருது பாண்டியர் தெரு, வெள்ளையப்பன் தெருவில் தலா ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டங்களை முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் நகராட்சி பொறியாளர் குணசேகர், ஓ.பி.எஸ்., அணி நகர செயலாளர் பழனிராஜ், நகர அவைத் தலைவர் மணிகண்டன், மத்திய ஒன்றிய தலைவர் சுந்தரராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் குருமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.