அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கம்
அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கம்
அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கம்
ADDED : ஜன 11, 2024 04:05 AM

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. காலை 11:00 மணிக்கு துவங்கிய பலத்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் மீண்டும் சாரல் மழை தொடர்ந்தது.
மழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. வடிகால் வசதியின்றி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் மழை நீர் குளம் போல் தேங்கியது.
ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோடு, ஏத்த க்கோயில் ரோடு, மேக்கிழார்பட்டி ரோடுகளில் உள்ள ரயில்வே சுரங்க பாலங்களில் தேங்கிய மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.