விபத்தில் ரயில்வே கேட் கீப்பர் பலி
விபத்தில் ரயில்வே கேட் கீப்பர் பலி
விபத்தில் ரயில்வே கேட் கீப்பர் பலி
ADDED : ஜூன் 13, 2025 03:07 AM
தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி மின் அரசு நகர் மாரிமுத்து 49. இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். 3 ஆண்டுகளுக்கு முன் ரயில்வேயில் கேட் கீப்பராக வேலைக்கு சேர்ந்து, கருவேல்நாயக்கன்பட்டி ரயில்வே கேட்டில் பணிபுரிந்தார். நேற்று காலை டூவீலரில் தேனி நோக்கி வந்த போது கருவேல்நாயக்கன்பட்டி ரயில்வே கேட்டை கடந்து இடது புறமாக தேவர் சிலை அருகே திரும்பினார்.
அப்போது பிராதுகாரன்பட்டி கிழக்குத்தெரு அருள்குமார் 38, ஆண்டிபட்டி நோக்கி ஓட்டி வந்த டூவீலர், கேட் கீப்பர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் கீழே விழுந்து மாரிமுத்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.