/உள்ளூர் செய்திகள்/தேனி/ கொத்தவரங்காய் விலை இன்றி விவசாயிகள் கவலை கொத்தவரங்காய் விலை இன்றி விவசாயிகள் கவலை
கொத்தவரங்காய் விலை இன்றி விவசாயிகள் கவலை
கொத்தவரங்காய் விலை இன்றி விவசாயிகள் கவலை
கொத்தவரங்காய் விலை இன்றி விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 13, 2025 03:07 AM

போடி: போடி பகுதியில் கொத்தவரங்காய்க்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
போடி அருகே விசுவாசபுரம், சிலமலை, பத்திரகாளிபுரம், ராசிங்காபுரம், நாகலாபுரம் பகுதியில் கொத்தவரங்காய் சாகுபடி செய்துள்ளனர்.கொத்தவரங்காய் நடவு செய்த 50 முதல் 60 நாட்களில் விளைந்து மகசூல் பெறலாம். இதற்கு ஜுன், ஜூலை, அக்., நவ., மாதங்கள் சீசனாகும். கடந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்து இருந்து கிலோ ரூ. 35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்தது.
இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மாதம் கிலோ ரூ.25 முதல் ரூ. 30 வரை விலை போனது. தற்போது கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில் : இந்த ஆண்டு விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லை. விதைப்பு, மருந்தடிப்பு, காய்பறிப்பு கூலி கொடுப்பதற்கு கூட கட்டுபடியாகாத விலை உள்ளது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளோம் என்றனர்.