ADDED : ஜன 11, 2024 04:12 AM
பெரியகுளம் : பெரியகுளத்தில் பி.எஸ்.என்.எல்.,சேவை நேற்று முடங்கியதால் ஏராளமானோர் அவதிப்பட்டனர்.பெரியகுளத்தில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி லேண்ட்லைன் போன் பிராட்பேண்ட் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு அலுவலகங்களில் அதிகமாக இச்சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது கடந்த சில வாரங்களாக அடிக்கடி அலைபேசி இணைப்பு துண்டிப்பதும் பல மணி நேரத்திற்கு பின் சீரமைப்பதுமாக உள்ளனர். ஏற்கனவே ஏராளமான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையிலிருந்து, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள தடையில்லா சேவையை வழங்க, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் முன் வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.