/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : செப் 13, 2025 04:22 AM
தேனி: தேனி எல்.எஸ்., மில் நிர்வாகம், சென்னை பிரீடம் டிரஸ்ட், வாரா பியூச்சர் நிறுவனங்கள் இணைந்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடந்தது. எல்.எஸ்.,மில் இணை நிர்வாக இயக்குநர் சாந்தி தலைமை வகித்தார். எஸ்.பி., சினேஹாபிரியா முன்னிலை வகித்தார். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டி, செயற்கை கைகள், கால்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. வர்த்தக பிரமுகர் சுதாகரன், பிசியோதெரபி டாக்டர் கார்த்திக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மில் நிறுவன அலுவலர்கள் நிவாஸ், கோபாலன், சலீம் முகாமை ஒருங்கிணைத்தனர்.