Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீதிமன்றங்களில் '‛டிஜிட்டல் சைன்' அனுமதிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

நீதிமன்றங்களில் '‛டிஜிட்டல் சைன்' அனுமதிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

நீதிமன்றங்களில் '‛டிஜிட்டல் சைன்' அனுமதிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

நீதிமன்றங்களில் '‛டிஜிட்டல் சைன்' அனுமதிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

ADDED : செப் 13, 2025 04:22 AM


Google News
தேனி: நீதிமன்ற விசாரணைக்காக வழக்கறிஞர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் மனுக்களை எண் குறிப்பிட்டு விசாரணைக்கு எடுக்கின்றன. இதில் 'ஈ-கோர்ட்' ஆன்லைன் பதிவின் போது ஓ.டி.பி., எண் கிடைப்பதில் காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்க டிஜிட்டல் சைன்' பதிவேற்றும் நடைமுறையை அமல்படுத்தி, விசாரணைக்கு அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற பரிந்துரையில் உருவாக்கப்பட்ட 'ஈ-கோர்ட்' டிஜிட்டல் இணைய முனையத்தில் வழக்கறிஞர்கள் ஆவணத்தை பதிவேற்றிய உடன் ஓ.டி.பி., எண்கிடைக்கும். இந்த ஓ.டி.பி., எண் ஒரு நிமிடத்திற்கு 4 ஓ.டி.பி.,க்கள் மட்டுமே நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கிடைக்கும். இதில்கூடுதல் சேவையாக டிஜிட்டல் சைன்'பயன்படுத்தி ஆவணங்களை பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களுக்கு 'டிஜிட்டல் சைன்' பயன்படுத்துவதை கட்டாயமாக்க வில்லை.

இதனால் ஓ.டி.பி., எண் பெறும் காலவிரயத்தை தடுக்க நீதிமன்றங்கள் 'டிஜிட்டல்சைன்' பதிவேற்றும் நடைமுறையை ஏற்று கட்டாயமாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: ஆவணங்களை வழக்கறிஞர்கள் பதிவேற்றம் செய்யும் போது ஓ.டி.பி., எண் கிடைக்கும். அதை வைத்துத்தான் ஆன்லைன் மூலம் நீதிபதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வர்.

ஓ.டி.பி., எண் கிடைக்க வில்லை எனில் அந்த பதிவிற்கு 2 நிமிடங்கள் கழித்த பின்புதான் புதிய ஓ.டி.பி., கிடைக்கும் சூழல் உள்ளது. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிக்க மனு அளிக்க காத்திருப்பது நேர விரயத்தால்பாதிக்கப்படுகின்றனர்.

உச்சநீதிமன்றம் ஆன்லைன் ஈகோர்ட் நடைமுறையில் டிஜிட்டல் சைன் பதிவேற்றத்தை அங்கீகரிக்க வேண்டும்.ஐகோர்ட் டிஜிட்டல் சைன் அனுமதிக்கு உத்தரவிட வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us