/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செப். 24 ல் ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செப். 24 ல் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செப். 24 ல் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செப். 24 ல் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செப். 24 ல் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 12, 2025 04:45 AM
கம்பம்: ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் கூட்டமைப்பு சார்பில் செப். 24 ல் தேனியில் ஆயிரம் பேர் பங்கேற்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளர் சுந்தர பாண்டியன் தெரிவித்தார்.
அவர் அறிக்கையில் கூறியதாவது : தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ 10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணி காலத்தை நிரந்தரம் செய்ய வேண்டும். சுகாதார ஊக்குநர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கவும், மக்கள் நலப் பணியாளர்களுக்கும், குடிநீர் ஆப்பரேட்டர்களுக்கு கால முறை ஊதியம்,
வழங்கவும், கணினி உதவியாளர்களை நிரந்தரம் செய்திடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப் 24 ல் தேனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆயிரம் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.