ADDED : செப் 03, 2025 01:09 AM
தேனி : தேனியில் மாவட்ட குரும்பா கவுண்டர் இன மக்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
அமைப்பு நிர்வாகி முருகன், ஆவுலம்மன் அறக்கட்டளை தலைவர் மணிவண்ணன், பழங்குடியினர் அமைப்பு நிறுவன தலைவர் விஜயன்பார்த்தசாரதி பங்கேற்றனர். அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவை கெப்புரங்கன்பட்டி வனகுழுத்தலைவர் முருகன் ஒருங்கிணைத்தனர்.