ADDED : மே 22, 2025 04:46 AM
தேனி: தேனி வீரபாண்டி கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சிநிலையத்தில்' கிராமப்புற ஏழைகள் நிலையான வருமானம் ஈட்டுவதற்கான நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி' என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி மே 27 ல் நடக்க உள்ளது.
இந்த ஒருநாள் பயிற்சி கட்டணம் ரூ. 590 ஆகும். பயிற்சியில் கோழி வளர்ப்பு, நோய்தடுப்பு, அலகு வெட்டுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு 97890 04892 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை தெரிவித்துள்ளார்.