/உள்ளூர் செய்திகள்/தேனி/ லைசென்ஸ் இன்றி ஜீப் ஓட்டும் டிரைவர்கள் லைசென்ஸ் இன்றி ஜீப் ஓட்டும் டிரைவர்கள்
லைசென்ஸ் இன்றி ஜீப் ஓட்டும் டிரைவர்கள்
லைசென்ஸ் இன்றி ஜீப் ஓட்டும் டிரைவர்கள்
லைசென்ஸ் இன்றி ஜீப் ஓட்டும் டிரைவர்கள்
ADDED : மே 22, 2025 04:46 AM
மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் 'லைசென்ஸ்' இன்றி டிரைவர்கள் ஜீப்புகளை ஓட்டுவதால், மலைவாழ் மக்களின் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மூணாறு அருகே மலைவாழ் மக்களுக்கு என உருவாக்கப்பட்ட இடமலைகுடி ஊராட்சியில் 24 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கிறனர். அப்பகுதிக்கு செல்ல ரோடு வசதி சரிவர இல்லை என்பதால் கரடு, முரடான பாதையில் அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள் மட்டும் சென்று வருகின்றன. இடமலைகுடி ஊராட்சியில் 28 தனியார் ஜீப்புகள் உள்ளன. அவற்றை ஓட்டும் டிரைவர்களில் ஒரு சிலர் தவிர பெரும்பாலானோருக்கு 'லைசென்ஸ்' இல்லை. லைசென்ஸ் பெற குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்து இருக்க வேண்டும் என்பதால், டிரைவர்கள் லைசென்ஸ் பெற இயலவில்லை.
இடமலைகுடி ஊராட்சிக்கு செல்லும் ரோடு மிகவும் ஆபத்தானது என்பதால் ஜீப்புகள் எதேனும் விபத்துகளில் சிக்க நேரிட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு இல்லை.
அதிக கட்டணம்: இடமலைகுடியில் சொசைட்டிகுடியில் இருந்து
மூணாறுக்கு வந்து செல்ல ஜீப்புகளில் நபர் ஒன்றுக்கு ரூ.800 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
அதிக கட்டணத்தால் பெரும்பாலானோர் மூணாறுக்கு வருவதை தவிர்க்கின்றனர்.
கட்டணத்தை முறைபடுத்தி லைசென்ஸ் உள்ளவர்களை மட்டும் ஜீப்புகளை ஓட்ட அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் அல்லாதபட்சத்தில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.