ADDED : பிப் 12, 2024 05:53 AM
தேவதானப்பட்டி: புல்லக்காபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி.
இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் தாய் செல்லம்மாள் தங்கியுள்ளார். இரவு நேரங்களில் அருகேயுள்ள தனது இளைய மகன் வீட்டிற்கு தூங்க செல்வார். காலையில் பார்த்தபோது தனது மூத்த மகன் பால்பாண்டி வீட்டில் ஒரு கிலோ மதிப்பிலான சுவாமி சிலைகள், வெள்ளி கொலுசுகள், வீட்டு பத்திரம், பட்டாவை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.