/உள்ளூர் செய்திகள்/தேனி/குடிசை மாற்று வாரிய இடத்தில் மண் அள்ளியவர்களிடம் போலீஸ் விசாரணைகுடிசை மாற்று வாரிய இடத்தில் மண் அள்ளியவர்களிடம் போலீஸ் விசாரணை
குடிசை மாற்று வாரிய இடத்தில் மண் அள்ளியவர்களிடம் போலீஸ் விசாரணை
குடிசை மாற்று வாரிய இடத்தில் மண் அள்ளியவர்களிடம் போலீஸ் விசாரணை
குடிசை மாற்று வாரிய இடத்தில் மண் அள்ளியவர்களிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஜன 03, 2024 07:07 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே குடிசை மாற்று வாரிய இடத்தில் அரசு ஒப்பந்த பணிக்கு அனுமதியின்றி மண் அள்ளியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பபட்டி ஊராட்சி மேக்கிழார்பட்டியில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 4.45 ஏக்கர் பரப்பில் ரூ.26.11 கோடியில் 225 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டும் வரும் வீடுகளின் கட்டுமானப்பணிக்கான அரசு ஒப்பந்தத்தை தேனியை சேர்ந்த சர்வேஸ் ராஜா எடுத்துள்ளார். சப் -கான்ட்ராக்ட் பெற்றுள்ள பிரமுகர் வீடுகளை கட்டி வருகிறார். இதுவரை 96 வீடுகள் கட்டப்பட்டு பூச்சு வேலைகள் நடந்து வருகிறது. கட்டுமானத்திற்கு தேவையான மண்ணை அருகில் உள்ள பட்டா இடத்தில் எவ்வித அனுமதியும் இன்றி மண் அள்ளும் இயந்திரம் மூலம் அள்ளி டிராக்டரில் கொண்டு சென்றுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பரத் தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டும் இடத்திற்கு வந்து பணிகளை நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆண்டிபட்டி போலீசார் மண் அள்ள பயன்படுத்திய இயந்திரம், டிராக்டரை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய தேனி முல்லை நகரை சேர்ந்த கட்டுமான சூப்பர்வைசர் அருண்குமார், மேக்கிழார்பட்டி டிரைவர் விக்னேஷ் 28, டிராக்டர் டிரைவர் பாலமுருகன் ஆகியோர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.