/உள்ளூர் செய்திகள்/தேனி/'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நெருக்கடி பெரியகுளத்தில் போலீசார் மவுனம்'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நெருக்கடி பெரியகுளத்தில் போலீசார் மவுனம்
'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நெருக்கடி பெரியகுளத்தில் போலீசார் மவுனம்
'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நெருக்கடி பெரியகுளத்தில் போலீசார் மவுனம்
'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நெருக்கடி பெரியகுளத்தில் போலீசார் மவுனம்
ADDED : பிப் 24, 2024 04:35 AM

பெரியகுளம் : பெரியகுளம் திண்டுக்கல் ரோட்டில் 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் குவிந்து கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கனரக வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட்டிலிருந்து தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு வழியாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை, பெங்களூர் உள்ளிட்டநகரங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் செல்கிறது. பஸ்ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் இருந்து 200 மீட்டர் இடைவெளி வத்தலக்குண்டு ரோட்டில் வங்கிகள், பல்வேறுவர்த்தக நிறுவனங்கள் செயல்படுகிறது.இந்த இடங்கள் 'நோ பார்க்கிங்' பகுதியாகும். ஆனாலும் டூவீலர், ஆட்டோவில் வருபவர்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தாமல் ரோட்டில் நிறுத்துகின்றனர். இதனால் வாகனங்கள் இந்தப் பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
போக்குவரத்து போலீசார் புறக்கணிப்பு
இப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போலீசார் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்களைஒழுங்குபடுத்தினர். விதிமீறி 'நோ பார்க்கிங்'கில் நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து போலீஸ் ஸ்டேஷன் தூக்கி செல்லப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்த அஞ்சினர்.
தற்போது போக்குவரத்து போலீசார் இதனை கண்காணிக்காதால் மீண்டும் வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இதனால் தினமும் இப் பகுதியில் சிறுசிறு விபத்துக்கள், வீண் வாக்குவாதம், அவதூறு பேச்சு அதிகரித்து வருகிறது. டி.எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.