/உள்ளூர் செய்திகள்/தேனி/சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்புசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : பிப் 06, 2024 03:22 AM

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் பள்ளி சென்ற 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராயப்பன்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு 31, பத்தாண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018 ஜூலை 9 ல் பள்ளிக்கு சென்ற 16 வயது சிறுமியை சதீஷ்குமார் ஆட்டோவில் கடத்தி சென்றார். பின் தோட்டத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி இறக்கி விட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் கூறினார். ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். சதீஷ்குமார் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து 2018 ஜூலை 10ல் கைது செய்தனர். வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கணேசன், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.