/உள்ளூர் செய்திகள்/தேனி/போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழிபோலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஜன 31, 2024 06:39 AM
பெரியகுளம் : மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழியும், 2 நிமிடம் மவுன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.
பெரியகுளம் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட வடகரை போலீஸ் ஸ்டேஷனில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு
டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
இதனை அனைத்து போலீசாரும் ஏற்றனர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தென்கரை, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், ஜெயமங்கலம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.