/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆலிழை பசுமை இயக்கம் சார்பில் குறுங்காடு உருவாக்க திட்டம் மரக்கன்றுகள் நட்டு பணி துவக்கம்ஆலிழை பசுமை இயக்கம் சார்பில் குறுங்காடு உருவாக்க திட்டம் மரக்கன்றுகள் நட்டு பணி துவக்கம்
ஆலிழை பசுமை இயக்கம் சார்பில் குறுங்காடு உருவாக்க திட்டம் மரக்கன்றுகள் நட்டு பணி துவக்கம்
ஆலிழை பசுமை இயக்கம் சார்பில் குறுங்காடு உருவாக்க திட்டம் மரக்கன்றுகள் நட்டு பணி துவக்கம்
ஆலிழை பசுமை இயக்கம் சார்பில் குறுங்காடு உருவாக்க திட்டம் மரக்கன்றுகள் நட்டு பணி துவக்கம்
ADDED : ஜன 03, 2024 06:59 AM

உத்தமபாளையம்: ஆலிழை பசுமை இயக்கம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு ஒன்றை உருவாக்க புத்தாண்டு அன்று பணிகள் துவங்கியது.
ஆலிமை பசுமை இயக்கம் 15 ஆண்டுகளுக்கு மேலாக கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுப்புறச்சூழல் மாசு படாமல் பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில புத்தாண்டில் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு ஏற்படுத்தும் திட்டத்தில் முதலில் 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
கோகிலாபுரம் ஊராட்சி தலைவர் கருப்பையா இடத்தை சுத்தம் செய்து வழங்கினார்.
ராமசாமி நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பவுன்ராஜ் மரக்கன்றுகளை வழங்கினார்.
ராயப்பன்பட்டி ஊராட்சி தலைவர் பால்ராஜ் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குழிதோண்டும் இயந்திரத்தை வாங்கி அன்பளிப்பாக வழங்கினார்.
ஆலிழை பசுமை இயக்க நிர்வாகி மணிமாறன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மணிமாறன் கூறுகையில், தாமரை குளத்தை ஒட்டியே இந்த குறுங்காடு அமைக்கின்றோம்.
பறவைகள் வந்து இளைப்பாறி உண்டு செல்ல நாவல், கொடிக்காய் மர வகைகள் வளர்க்க உள்ளோம். துவக்க நிகழ்ச்சியில் 100 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். இனி தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்து, இப்பகுதியை பறவைகள் சரணாலயமாக மாற்றுவோம் என்றார்.