/உள்ளூர் செய்திகள்/தேனி/4.70 லட்சம் செங்கரும்பு கொள்முதல் செய்ய திட்டம்4.70 லட்சம் செங்கரும்பு கொள்முதல் செய்ய திட்டம்
4.70 லட்சம் செங்கரும்பு கொள்முதல் செய்ய திட்டம்
4.70 லட்சம் செங்கரும்பு கொள்முதல் செய்ய திட்டம்
4.70 லட்சம் செங்கரும்பு கொள்முதல் செய்ய திட்டம்
ADDED : ஜன 05, 2024 04:07 AM
கம்பம் : பொங்கல் பரிசு தொகுப்பிற்கு தேனி மாவட்டத்திற்கு 4 லட்சத்து 70 ஆயிரம் செங்கரும்புகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் 2 லட்சத்து 30 ஆயிரம் கரும்பு, பெரியகுளத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் கரும்புகள், தேனியில் 20 ஆயிரம் கரும்புகள் வாங்க அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் கடைசி கட்டத்தில் சிறிய மாறுதல்கள் ஏற்படலாம். 6 அடி நீளம் கொண்ட தரமான கரும்பு வழங்க வேண்டும். ஒரு கரும்பின் கொள்முதல் விலை ரூ. 33 என அரசு நிர்ணயித்துள்ளது. வெட்டு கூலி, ஏற்றி இறக்கும் கூலி அதில் அடங்கும்.
கடந்தாண்டு வேளாண் துறை மூலம் செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு கொள்முதல் யார் மேற்கொள்வது என்பது பற்றி அரசு தெளிவுபடுத்தவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அல்லது வேளாண் துறை கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பான உத்தரவுகள் இன்று வரை பிறப்பிக்கப்படவில்லை.