/உள்ளூர் செய்திகள்/தேனி/ விதிமீறிய 10 குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் பெரியகுளம் சப் கலெக்டர் நடவடிக்கை விதிமீறிய 10 குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் பெரியகுளம் சப் கலெக்டர் நடவடிக்கை
விதிமீறிய 10 குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் பெரியகுளம் சப் கலெக்டர் நடவடிக்கை
விதிமீறிய 10 குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் பெரியகுளம் சப் கலெக்டர் நடவடிக்கை
விதிமீறிய 10 குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் பெரியகுளம் சப் கலெக்டர் நடவடிக்கை
ADDED : செப் 17, 2025 02:32 AM
தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகாக்களில் விதிமீறிய 10 குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் விதித்து பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் கல் மற்றும் கிராவல் குவாரிகள் இயங்குகின்றன. இந்த குவாரிகளில் கனிமவளத்துறை நிர்ணயித்த அளவில் தான் கனிமம் எடுக்க வேண்டும். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்கள் எடுத்துள்ளனர். சில குவாரிகளில் அனுமதி வழங்கிய இடத்தை தவிர்த்து பிற இடங்களில் கனிமம் எடுத்தது. அரசுபுறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி கனிமம் கடத்தியதாக பெரியகுளம் சப் கலெக்டருக்கு புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து சப் கலெக்டர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகாக்களில் செயல்படும் குவாரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். கடந்த 6 மாதங்களில் நடத்திய ஆய்வில் 10 குவாரிகளில் விதிமீறல் தெரிந்தது.
இதன்படி ஆண்டிபட்டியில் 6, பெரியகுளத்தில் 3, தேனியில் ஒன்று என 10 குவாரிகளின் ஏலதாரர்களுக்கு ரூ. 19 கோடி அபராம் விதித்து பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் உத்தரவிட்டுள்ளார்.