/உள்ளூர் செய்திகள்/தேனி/பென்னிகுவிக் பிறந்தநாள்: இரட்டை மாட்டுவண்டி பந்தயம்பென்னிகுவிக் பிறந்தநாள்: இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
பென்னிகுவிக் பிறந்தநாள்: இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
பென்னிகுவிக் பிறந்தநாள்: இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
பென்னிகுவிக் பிறந்தநாள்: இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஜன 06, 2024 06:44 AM

கம்பம்: கர்னல் ஜான் பென்னிகுவிக் 182 வது பிறந்தநாளை முன்னிட்டு சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் போட்டியில் பங்கேற்றது.
சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலை நடைபெற்றது. சுருளிப்பட்டி முதல் சுருளி அருவி வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப் போட்டிகளில் பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு, வான்சிட்டு, புள்ளிமான், இளம் சிட்டு ஆகிய பிரிவுகளில் வண்டிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வண்டிகள் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பங்கேற்றனர். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இதில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கினர்.