/உள்ளூர் செய்திகள்/தேனி/புள்ளிமான்கோம்பை டவுன் பஸ்சை வத்தலக்குண்டு வரை நீட்டிக்கணும்புள்ளிமான்கோம்பை டவுன் பஸ்சை வத்தலக்குண்டு வரை நீட்டிக்கணும்
புள்ளிமான்கோம்பை டவுன் பஸ்சை வத்தலக்குண்டு வரை நீட்டிக்கணும்
புள்ளிமான்கோம்பை டவுன் பஸ்சை வத்தலக்குண்டு வரை நீட்டிக்கணும்
புள்ளிமான்கோம்பை டவுன் பஸ்சை வத்தலக்குண்டு வரை நீட்டிக்கணும்
ADDED : ஜன 06, 2024 06:38 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி - புள்ளிமான்கோம்பை டவுன் பஸ்சை வத்தலக்குண்டு வரை நீட்டிக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டுக்கு தேனி, உசிலம்பட்டி, பெரியகுளம், வத்தலகுண்டு டெப்போக்கள் மூலம் 27 முறை டவுன் பஸ் சென்று வருகிறது.
மாலை 4:00 மணிக்கு உசிலம்பட்டி டெப்போ பஸ் ஆண்டிபட்டியில் இருந்து புள்ளிமான்கோம்பை வரை சென்று வந்தது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சில நாட்களுக்கு முன் இந்த பஸ்சை வத்தலக்குண்டு வரை நீட்டிப்பு செய்தனர். இந்நிலையில் இரு நாட்களாக இந்த பஸ் வத்தலக்குண்டு செல்லாமல் புள்ளிமான்கோம்பை சென்று ஆண்டிபட்டி திரும்பி விடுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டிபட்டியில் மாலை 3:30 மணிக்குப் பின் வத்தலக்குண்டு செல்ல அடுத்து 4:30 மணிக்குத்தான் டவுன் பஸ் உள்ளது. 4:00 மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து புறப்படும் பஸ் புள்ளிமான்கோம்பையுடன் திரும்புவதால், 4:30 மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டு செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாகிறது. இதனால் பள்ளி முடிந்து வரும் மாணவ, மாணவிகள் அதிக சிரமப்படுகின்றனர்.
இதனால் மாலை 4:00 மணிக்கு புள்ளிமான்கோம்பை சென்று திரும்பும் பஸ்சை வத்தலக்குண்டு வரை மீண்டும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றனர்.