/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் தற்காலிக பஸ் ஸ்டாப் நிழற்கூரை அகற்றம் பயணிகள் மீண்டும் அவதி தேனியில் தற்காலிக பஸ் ஸ்டாப் நிழற்கூரை அகற்றம் பயணிகள் மீண்டும் அவதி
தேனியில் தற்காலிக பஸ் ஸ்டாப் நிழற்கூரை அகற்றம் பயணிகள் மீண்டும் அவதி
தேனியில் தற்காலிக பஸ் ஸ்டாப் நிழற்கூரை அகற்றம் பயணிகள் மீண்டும் அவதி
தேனியில் தற்காலிக பஸ் ஸ்டாப் நிழற்கூரை அகற்றம் பயணிகள் மீண்டும் அவதி
ADDED : ஜூன் 09, 2025 02:43 AM

தேனி: தேனியில் மதுரை ரோட்டில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் ஸ்டாப் நிழற்கூரையை நகராட்சி அகற்றியது. இதனால் பயணிகள் பஸ்ஸூக்காக மீண்டும் வெயிலில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராஜவாய்க்காலில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் போடி, கம்பம் வழி செல்லும் பஸ்கள், பெரியகுளம் செல்லும் பஸ்கள் மட்டும் ஸ்டாண்டிற்குள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது. போடி, கம்பம் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் மதுரை ரோட்டில் பகவதியம்மன் கோயில் அருகே தற்காலிக பஸ் ஸ்டாப்பில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோடை காலம் துவங்கிய போது அந்த பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்கப்பட்டது. சில நாட்களில் நிழற்கூரை டூவீலர் ஸ்டாண்டாக மாறியது. தொடர் மழை பெய்ததால் அப்பகுதி சகதியாகிறது. இதனால் நகராட்சி அதிகாரிகள் நிழற்கூரையை அகற்றினர். அதனால் பயணிகள் மீண்டும் வெயிலில் பஸ்ஸூக்கு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மழை காலம் துவங்கினாலும் தண்ணீர் உட்புகாதவாறு தற்காலிக நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.