கடைகளை சேதப்படுத்திய படையப்பா யானை
கடைகளை சேதப்படுத்திய படையப்பா யானை
கடைகளை சேதப்படுத்திய படையப்பா யானை
ADDED : ஜன 06, 2024 06:42 AM

மூணாறு: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் ரோட்டோரம் உள்ள இரண்டு கடைகளை சேதப்படுத்திய படையப்பா கடலை மாவு, சர்க்கரை உள்பட பொருட்களை தின்றது.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷன் பகுதியில் நேற்று முன்தினம் பகலில் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை நடமாடியது. அந்த யானை அதே எஸ்டேட் பகுதியில் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் இரவு 9:00 மணிக்கு ரோட்டோரம் உள்ள அக்னிமுத்துக்குச் சொந்தமான கடையை சேதப் படுத்தியதுடன் கடலை மாவு, சர்க்கரை உள்பட பல்வேறு பொருட்களை தின்றது. அதன்பிறகு அருகில் உள்ள காளிசாமியின் கடையை சேதப்படுத்தியது. பின்னர் அங்கு தேயிலை பாக்டரி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நடமாடிய யானை தாமாக காட்டிற்குள் சென்றது. அதனால் தொழிலாளர்கள் தூக்கத்தை இழந்தனர்.