/உள்ளூர் செய்திகள்/தேனி/ கூலிப்படையினரால் கொலை செய்து உடல் புதைப்பு கூலிப்படையினரால் கொலை செய்து உடல் புதைப்பு
கூலிப்படையினரால் கொலை செய்து உடல் புதைப்பு
கூலிப்படையினரால் கொலை செய்து உடல் புதைப்பு
கூலிப்படையினரால் கொலை செய்து உடல் புதைப்பு
ADDED : மார் 23, 2025 07:24 AM

மூணாறு : இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜூஜோசப் 50. இவர், டிப்பர் லாரி ஆகியவற்றை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். அவர் மார்ச் 20ல் அதிகாலை வீட்டில் இருந்து மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் தொடுபுழா போலீசில் நேற்று முன் தினம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து எர்ணாகுளத்தில் இருந்து கூலிப்படையைச் சேர்ந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.இதில் பிஜூஜோசப் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. தொடுபுழா அருகே கலயந்தானி பகுதியில் உள்ள கேட்ரிங் மைய குடோனில் குப்பை குழியில் உடலை புதைத்து கான்கிரீட்டால் மூடியதாக தெரியவந்தது.
தொடுபுழா தீயணைப்பு துறையினரின் உதவியுடன் நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பணம் தொடர்பான பிரச்னையில் கூலிப்படையினரால் பிஜூ ஜோசப் கொலை செய்யப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இடுக்கி எஸ்.பி. விஷ்ணு பிரதீப் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.