/உள்ளூர் செய்திகள்/தேனி/கரைகள் ஆக்கிரமிப்பால் முல்லைப் பெரியாறு சுருங்குகிறது! அதிகாரிகள் அலட்சியத்தால் கால்வாயாக மாறியதுகரைகள் ஆக்கிரமிப்பால் முல்லைப் பெரியாறு சுருங்குகிறது! அதிகாரிகள் அலட்சியத்தால் கால்வாயாக மாறியது
கரைகள் ஆக்கிரமிப்பால் முல்லைப் பெரியாறு சுருங்குகிறது! அதிகாரிகள் அலட்சியத்தால் கால்வாயாக மாறியது
கரைகள் ஆக்கிரமிப்பால் முல்லைப் பெரியாறு சுருங்குகிறது! அதிகாரிகள் அலட்சியத்தால் கால்வாயாக மாறியது
கரைகள் ஆக்கிரமிப்பால் முல்லைப் பெரியாறு சுருங்குகிறது! அதிகாரிகள் அலட்சியத்தால் கால்வாயாக மாறியது
ADDED : ஜூலை 03, 2024 05:40 AM

தென் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம், பாசன வசதிக்கு முக்கியமானதாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் மின் உற்பத்தி செய்தபின் கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக முல்லைப்பெரியாற்றில் ஓடி வைகை அணையில் சேருகிறது.
ஆற்றின் இரு கரைப்பகுதிகளிலும் தென்னந்தோப்புகள், புளிய மரங்கள், இலவ மரங்கள், நெல் சாகுபடி நிலங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அகலமாக இருந்த ஆறு தற்போது கால்வாயாக சுருங்கியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்கும் போது ஆக்கிரமிப்பால் ஆற்றின் போக்கு திசை மாறி மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் நில அளவைத்துறை, வருவாய்த்துறை, போலீஸ், பொதுப்பணித்துறை என பல துறைகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணியை செய்வதற்கு யார் பிள்ளையார் சுழி போடுவது என்பதால் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பல்வேறு பிரச்னைகளுக்காக போராடும் விவசாயிகளும் ஆக்கிரமிப்பால் சுருங்கும் முல்லைப் பெரியாற்றிற்காக குரல் கொடுக்க தயங்குகின்றனர்.
மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து தண்ணீர் வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்துவதற்கு முன் பொதுப்பணித்துறையினர் களத்தில் இறங்க வேண்டியது அவசியமாகும்.