/உள்ளூர் செய்திகள்/தேனி/ தர்மசாஸ்தா கோயில் காணிக்கை காசு சேகரிப்பு : ரூ.31.93 லட்சத்திற்கு ஏலம் தர்மசாஸ்தா கோயில் காணிக்கை காசு சேகரிப்பு : ரூ.31.93 லட்சத்திற்கு ஏலம்
தர்மசாஸ்தா கோயில் காணிக்கை காசு சேகரிப்பு : ரூ.31.93 லட்சத்திற்கு ஏலம்
தர்மசாஸ்தா கோயில் காணிக்கை காசு சேகரிப்பு : ரூ.31.93 லட்சத்திற்கு ஏலம்
தர்மசாஸ்தா கோயில் காணிக்கை காசு சேகரிப்பு : ரூ.31.93 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஜூலை 03, 2024 05:40 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கணவாய் மலையில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் பக்தர்கள் சார்பில் போடப்படும் எரி காசுகளை சேகரிக்க ஓராண்டு உரிமத்திற்கான ஏலம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அலுவலகத்தில் நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை துணை ஆணையர் அன்னக்கொடி, பெரியகுளம் சரக ஆய்வாளர் தனலட்சுமி, செயல் அலுவலர் ஹரிஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்த ஏலத்தில் 2 பேர் பங்கேற்றனர். அரசின் குறைந்தபட்ச நிர்ணய தொகையாக ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இ.புதுப்பட்டியைச் சேர்ந்த உதயபாண்டி ரூ.31 லட்சத்து 93 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து அதற்கான தொகையை அலுவலகத்தில் செலுத்தினார். கடந்த ஆண்டு ரூ.28 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.