/உள்ளூர் செய்திகள்/தேனி/கிடைக்குமா பொங்கல் பண்டிகைக்காவது போலீசாருக்கு 'டிவிடென்ட்' மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பார்ப்புகிடைக்குமா பொங்கல் பண்டிகைக்காவது போலீசாருக்கு 'டிவிடென்ட்' மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பார்ப்பு
கிடைக்குமா பொங்கல் பண்டிகைக்காவது போலீசாருக்கு 'டிவிடென்ட்' மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பார்ப்பு
கிடைக்குமா பொங்கல் பண்டிகைக்காவது போலீசாருக்கு 'டிவிடென்ட்' மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பார்ப்பு
கிடைக்குமா பொங்கல் பண்டிகைக்காவது போலீசாருக்கு 'டிவிடென்ட்' மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பார்ப்பு
ADDED : ஜன 06, 2024 06:44 AM
பெரியகுளம்: தமிழ்நாடு காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க உறுப்பினர்களாக உள்ள போலீசாருக்கு லாபத்திற்கான பங்கு (டிவிடென்ட்) தீபாவளிக்கே வழங்க வேண்டியது பொங்கல் பண்டிகைக்காவது கிடைக்குமா என்ற எதிர்பாரப்பில் போலீசார் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி,போடி, கம்பம் ஆகிய ஐந்து சப்--டிவிஷன்களுக்கு உட்பட்ட 31 போலீஸ் ஸ்டேஷன்கள், 15 க்கும் அதிகமான புறக்காவல் நிலையங்கள் உள்ளது. இதில் பணியாற்றும் போலீசார்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படும் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 600 க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கடனாக வழங்கப்படுகிறது. கடன் வழங்கும் தொகையில் பத்து சதவீதம் பிடித்தம் செய்து வரவு வைப்பதால் வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிடித்தம் செய்யப்படும் பணத்தில் டிவிடென்ட் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும்.
இதில் குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஒவ்வொருவருக்கும் பணம் கிடைக்கும். இத்தொகை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சங்க அலுவலர் ரவிச்சந்திரன் மருத்துவ விடுப்பில் சென்றாதல் ரூ. 3 கோடி பிரித்து வழங்குவதில் தற்காலிக அலுவலர் யாரும் முன் வரவில்லை. இதனால் தீபாவளிக்கு போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். விடுப்பில் சென்ற சங்க அலுவலர் தற்போது பணியில் உள்ளார். பண்டிகை இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் டிவிடென்ட் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. ஓரிரு நாட்களில் பணம் வழங்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
--