ADDED : செப் 15, 2025 04:02 AM
தேனி : தேனி மாவட்ட ம.நீ.ம., கட்சியின் சார்பில் சென்னையில் ம.நீ.ம.,கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் பெரியகுளம் தொகுதி நிர்வாகிகள் சார்பில் நடந்தது.
மாவட்டச் செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். மதுரை மண்டலச் செயலாளர் அழகர் காணொளி காட்சி மூலம் பேசினார்.
ஆண்டிபட்டி நிர்வாகி செந்தில்குமார், மாவட்ட அமைப்பாளர் ஆதிலிங்கபாண்டியன், பெரியகுளம் ஒன்றியச் செயலாளர் திருப்பதி, தேனி நகரச் செயலாளர் சேகர் (வடக்கு), அமிர்தவல்லி (தெற்கு), பஞ்சவர்ணம் (மேற்கு) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.