ADDED : ஜூன் 13, 2025 03:05 AM
கம்பம்:கம்பத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் , பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் , சொத்துவரி உயர்வை திரும்ப பெறவும், காலிப்பணியிடங்களை நிரப்ப மாநில அரசை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கம்பம் காந்தி சிலை அருகில் இருந்து நடை பயணம் துவங்கியது. நடைபயணத்திற்கு ஏரியா செயலாளர் லெனின் தலைமை வகித்தார்.
மத்திய குழு உறுப்பினர் பாலபாரதி துவக்கி வைத்தார். நகரின் 33 வார்டுகளிலும் நடைபயணம் நடைபெற்றது.
மாவட்ட குழு உறுப்பினர்கள் மோகன், பன்னீர்வேல் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.