ADDED : ஜூன் 13, 2025 03:05 AM
உத்தமபாளையம்: கோம்பை கரூர் வைஸ்யா பாங்க் தெற்கு பகுதி வீதியிலிருந்து அரண்மனை தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரை தரையில் பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு காப்பர் ஒயர்கள் திருடு போனது.
கம்பம் பி. எஸ்.என்.எல். அதிகாரி சத்தியபாமா கோம்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஆண்டிபட்டி அருகில் உள்ள எரதிம்மக்காள்பட்டியை சேர்ந்த வேல்முருகன் 48, கார்த்திக் ராஜா 35 ஆகியோர் ஒயர்களை திருடியது தெரிய வந்தது.
வேல்முருகனை கைது செய்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 90 கிலோ ஒயர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. கார்த்திக் ராஜாவை தேடி வருகின்றனர்.