/உள்ளூர் செய்திகள்/தேனி/ மார்க்சிஸ்ட் கம்யூ., காத்திருப்பு போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ., காத்திருப்பு போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூ., காத்திருப்பு போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூ., காத்திருப்பு போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூ., காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 30, 2025 03:27 AM
தேனி: சின்னமனுார் நகராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை நிலத்தை ஆக்கிரமித்துள்ளவரிடம் இருந்து மீட்டு, பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சார்பில், காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலபாரதி தலைமை வகித்தார்.மாநிலக்குழு நிர்வாகி தெய்வேந்திரன், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், ஆறுமுகம், தேனி தாலுகா செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் அம்சமணி, மாவட்ட குழு உறுப்பினர் கரண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என, மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.