/உள்ளூர் செய்திகள்/தேனி/ கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்
கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்
கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்
கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

கழுத்தை நெரித்து கொலை
இந்நிலையில் 2021 ஏப்.23 இரவு 9:30 மணிக்கு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருண்குமாரின் தாய் ராணி சமாதானம் செய்தார். மறுநாள் அதிகாலை 1:00 மணிக்கு மகன் வீட்டில் விளக்கு எரிவதை பார்த்து தாய் அங்கு சென்றபோது வைஷ்ணவி, சுடிதாரின் ஷால் மூலம் அருண்குமாரின் வாயை துடைத்து கொண்டிருந்தார். ஜெயச்சந்திரன் காலை பிடித்து கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்த போது அருண்குமார் கழுத்து முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தார். வைஷ்ணவி, ஜெயச்சந்திரனை கூடலுார் தெற்கு போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும் அருண்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இருவரும் கைதான நிலையில் நிபந்தனை ஜாமினில் வந்த வைஷ்ணவி 2021 அக்.10ல் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கொலை வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. ஜெயச்சந்திரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை , ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.