/உள்ளூர் செய்திகள்/தேனி/கோர்ட் உதவியாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது-கோர்ட் உதவியாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது-
கோர்ட் உதவியாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது-
கோர்ட் உதவியாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது-
கோர்ட் உதவியாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது-
ADDED : ஜன 05, 2024 04:57 AM

பெரியகுளம் : நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
லட்சுமிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கூடுதல் மகளிர் நீதித்துறை நீதிமன்றம் அலுவலக உதவியாளர் குப்புசாமி 36, பணியில் இருந்தார். ஆண்டிபட்டி குன்னூர் கலைஞர் நகரைச் சேர்ந்த வீமராஜ் 63.
வழக்கு விசாரணைக்காக வந்திருந்தார். நீதிமன்றம் வளாகத்தில் வீமராஜ் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். வெளியே சென்று பேசுமாறு வீமராஜிடம், குப்புசாமி தெரிவித்தார்.
இதில் கோபமடைந்த வீமராஜ், 'நீ யார் என்னை வெளியே போகச் சொல்வது' என கூறி குப்புசாமியின் சட்டையை பிடித்து இழுத்து, அவதூறாக பேசி அலுவலக பணி செய்ய விடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார். குப்புசாமி புகாரில் தென்கரை எஸ்.ஐ., தீபக், வீமராஜை கைது செய்தார்.