/உள்ளூர் செய்திகள்/தேனி/ தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
ADDED : மே 11, 2025 11:36 PM
தேவதானப்பட்டி; நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கெங்குவார்பட்டி வாலிபர் சுபாஷூக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து விசாரித்த தேவதானப்பட்டி போலீசார் ஜனஹரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.
கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெரு சுபாஷ் 23. அதே பகுதியைச் சேர்ந்த, இவரது நண்பர் ஜனஹர் 23. மதுரை அருகே திருப்புவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் 23. இவர் ஜனஹரின் நண்பர்.
இந்நிலையில் கடந்த வாரம் சுபாஷிற்கும், ஜனஹருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கெங்குவார்பட்டி பகுதிக்கு வந்த சுபாஷை, சந்தோஷ், ஜனஹர் ஒன்றாக சேர்ந்து அவதுாறாக பேசி, சந்தோஷ் அரிவாளால் சுபாஷை வெட்டினார். ஜனஹர் கட்டையால் தாக்கி காயப்படுத்தினார்.
இவர்களுடன் வந்தவர்களும் சுபாஷை தாக்கினர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சுபாஷ் கொண்டு செல்லப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் ஜனஹரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.-