/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2436க்கு ஏலம் மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2436க்கு ஏலம்
மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2436க்கு ஏலம்
மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2436க்கு ஏலம்
மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2436க்கு ஏலம்
ADDED : ஜூலை 03, 2025 12:27 AM
தேனி: தேனி வேளாண் விற்பனை குழு வளாகத்தில் நடந்த இநாம் விற்பனையில் மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2436க்கு விற்பனையானது.
தேனி சுக்குவாடன்பட்டியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடம் மூலம் வேளாண் விளை பொருட்கள் இநாம் முறையில் மறைமுக ஏலம் விடப்படுகிறது. இங்கு 4.9 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு வந்தது. மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2436க்கு விற்பனையானது. 4.9 டன் ரூ. 1.21 லட்சத்திற்கு விற்பனையானது.அதே போல் கொப்பரை தேங்காய் 833 கிலோ விற்பனைக்கு வந்தது. கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 251க்கு விற்பனையானது. குறைந்தபட்சமாக ரூ.135க்கு விற்பனையானது. கொப்பரை 833 கிலோ ரூ. 1.83 லட்சத்திற்கு விற்பனையானது. விளைபொருட்களை வேளாண் விற்பனைக்குழு மூலம் விற்பனை செய்ய நேரடியாக வேளாண் விற்பனை குழு வை அணுகலாம். அல்லது 99766 30746 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.