/உள்ளூர் செய்திகள்/தேனி/ மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை
மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை
மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை
மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை
ADDED : மே 21, 2025 02:17 AM

ஆண்டிபட்டி:மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் பிரணவ், பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் 100க்கு 96 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மஹாராஷ்டிரா, சாங்கிலி மாவட்டம், கார்வேவ் நகரை சேர்ந்தவர் ஜாதவ் சங்கர் - அருணா தம்பதியினர் மகன் பிரணவ். வேலைக்காக இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் குடியேறினர். ஆண்டிபட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் சேர்ந்த மாணவர் பிரணவ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றார். மராட்டிய மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர் தமிழ் பாடத்தில் 100க்கு 96 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் 99, அறிவியல் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். விடுமுறைக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்ற மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஆண்டிபட்டி வந்தார். அவருக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் பாராட்டினர்.