Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ டூவீலர் ஷோரூமில் ரூ.76.71 லட்சம் மோசடி மேலாளர், பெண் கணக்காளர் மீது வழக்கு

டூவீலர் ஷோரூமில் ரூ.76.71 லட்சம் மோசடி மேலாளர், பெண் கணக்காளர் மீது வழக்கு

டூவீலர் ஷோரூமில் ரூ.76.71 லட்சம் மோசடி மேலாளர், பெண் கணக்காளர் மீது வழக்கு

டூவீலர் ஷோரூமில் ரூ.76.71 லட்சம் மோசடி மேலாளர், பெண் கணக்காளர் மீது வழக்கு

ADDED : மே 21, 2025 03:02 AM


Google News
தேனி:தேனி மாவட்டம் கம்பத்தில் டூவீலர் ஷோரூமில் ரூ.76.71 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாளர் கம்பம் உத்தமபுரம் ஹரிஹரன், கணக்காளர் ஜெசிமாபானு மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி ஊஞ்சாம்பட்டி ரத்தினம்நகர் ஆதிசெந்தில் கம்பத்தில் புல்லட் ேஷாரூம் நடத்தி வருகிறார். ேஷாரூமில் மேலாளராக கம்பம் உத்தமபுரம் உலகத்தேவர் தெரு ஹரிஹரன், கணக்காளராக சின்னமனுார் ஜெசிமாபானும் பணிபுரிகின்றனர். 2024 மே 1 முதல் டிச.,31 வரை மேலாளரும், பெண் கணக்காளரும் சேர்ந்து வரவாகும் பணத்தை வங்கியில் செலுத்தாமல், செலுத்தியதாக நோட்டில் மட்டும் எழுதி விட்டு ரூ.12.70 லட்சம் வரை முறைகேடு செய்தனர்.

ஹரிஹரன், புல்லட் வாங்கிய 9 பேரிடம் முழுப்பணத்தையும் பெற்றுக்கொண்டு, போலி இன்வாய்ஸ் தயாரித்து ரூ.19.82 லட்சம் முறைகேடு செய்தார். மேலும் 9 பேருக்கு புதிய வாகனத்தை விற்பனை செய்து அதில் பெற்ற ரூ.22.36 லட்சம், தினமும் டூவீலர் உதிரிப் பாகங்கள் விற்பனை பணம் ரூ.7.40 லட்சம் என மொத்தம் ரூ.76.71 லட்சம் வரை முறைகேடு செய்தது ஆவணங்களை ஆய்வு செய்த போது தெரிந்தது. இதுகுறித்து ஆதிசெந்தில் எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., யாழிசை செல்வன் மற்றும் போலீசார் விசாரித்து மேலாளர் ஹரிஹரன், கணக்காளர் ஜெசிமாபானு மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us