ADDED : செப் 14, 2025 04:05 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. செப்.10 ல் வெள்ளப் பெருக்கினால் குளிக்க அனுமதி இல்லை.
செப்.11 தண்ணீர் வரத்து சீரானாதால் குளிக்க அனுமதி. செப்.12 பருவநிலை மாற்றத்தால் மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தண்ணீர் வரத்து சீரானதால் செப். 13 நேற்று முதல் குளிக்க அனுமதி.
செப்.10 முதல் 13 வரை நான்கு நாட்களில் நான்கு மாறுபட்ட அறிவிப்பினை வனத்துறை வெளியிட்டுள்ளது.
இன்று (செப். 14) ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் வாருங்கள் ஆனந்தமாக குளித்து செல்லுங்கள் என வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.