/உள்ளூர் செய்திகள்/தேனி/ நிலச்சரிவுக்கு வாய்ப்பு: தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு நிலச்சரிவுக்கு வாய்ப்பு: தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு
நிலச்சரிவுக்கு வாய்ப்பு: தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு
நிலச்சரிவுக்கு வாய்ப்பு: தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு
நிலச்சரிவுக்கு வாய்ப்பு: தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு
ADDED : ஜூன் 05, 2025 04:09 AM

மூணாறு:இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இம் மாவட்டத்தில் மே 24 முதல் ஒரு வாரம் பெய்த கனமழையில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 33 பேர் கொண்ட குழு செருதோணி அருகே வெள்ளாப்பாறையில் வனத்துறை கட்டடத்தில் முகாமிட்டுள்ளனர். நான்கு படகுகள், மண், நிலச்சரிவு ஏற்படும் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஸ்கூபா டைவிங் செட், மலையேறுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என அனைத்து ஏற்பாடுகளுடன் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.
ஆய்வு: இம்மாவட்டத்தில் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் பிரசாத் ஜி. சீனாத் தலைமையில் மூணாறு, மாங்குளம், ஆனவிரட்டி ஆகிய கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தினர்.
மூணாறில் அந்தோணியார் காலனி, 26 முறி, எம்.ஜி., லட்சம் ஆகிய காலனிகள், கேப் ரோடு, மாங்குளத்தில் ஆனக்குளம், பெரும்பன்குத்து, ஆறாம் மைல், தாழும்கண்டம், மாங்குளம் கேரள மின்வாரிய நீர் மின்நிலையம் திட்டம், ஆனவிரட்டியில் தேசிய நெடுஞ்சாலை, கோட்டப்பாறை காலனி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடந்தது.
முன்னதாக தேவிகுளம் தாசில்தார் சந்தோஷ்குமாருடன் மீட்பு படையினர் ஆலோசனை நடத்தினர். அவர் தலைமையில் வருவாய்துறையினர் ஆய்வின்போது உடனிருந்தனர்.