/உள்ளூர் செய்திகள்/தேனி/தேசிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுதேசிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 24, 2024 04:56 AM
தேனி : தேசிய அளவிலான யோகா, சிலம்பம், கராத்தே போட்டிகள் கடந்த வாரம் கோவாவில் உள்ள வாஸ்கோடா காமா பகுதியில் நடந்தது. இதில் அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 13, 14 வயது பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் ஜானேஸ்வர் தனிநபர் கராத்தே கட்டாப்பிரிவில் முதலிடம் பெற்றார். 9 முதல் 10 வயது பிரிவில் 4ம் வகுப்பு மாணவர் கார்த்திக் கராத்தே தனிநபர் கட்டா பிரிவில் முதலிடம் பெற்றார்.
சிலம்பம் ஒற்றைக் கம்பு பிரிவு போட்டியில் 13 முதல் 14 வயது பிரிவில் 8ம் வகுப்பு மாணவர்கள் மணிமுத்துபாண்டியன் முதலிடம் பெற்றார்.
இப்பிரிவில் 2ம் பரிசை 2ம் வகுப்பு மாணவர்கள் கிருத்திக், மதுரைவீரன் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள் ராமச்சந்திரன், ் ரமேஷ் ஆகியோரை பள்ளி முதல்வர் பரந்தாமன், பள்ளி கல்வி சங்கச் செயலாளர் பாக்கியகுமாரி பாராட்டினர்.