/உள்ளூர் செய்திகள்/தேனி/ கிரிக்கெட் போட்டியில் கே.ஆர்.சி.சி., அணி வெற்றி கிரிக்கெட் போட்டியில் கே.ஆர்.சி.சி., அணி வெற்றி
கிரிக்கெட் போட்டியில் கே.ஆர்.சி.சி., அணி வெற்றி
கிரிக்கெட் போட்டியில் கே.ஆர்.சி.சி., அணி வெற்றி
கிரிக்கெட் போட்டியில் கே.ஆர்.சி.சி., அணி வெற்றி
ADDED : செப் 02, 2025 03:42 AM
தேனி : தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
சின்னமனுார் விகாஷா பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் கே.ஆர்.சி.சி., அணி, மேனகா மில்ஸ் ஜூனியர் அணிகள் மோதின. கே.ஆர்.சி.சி., அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 38 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. பாண்டீஸ்வரன் 61 ரன்கள் எடுத்தார். முகமது 5 விக்கெட்வீழ்த்தினார். சேசிங் செய்த மேனகா மில்ஸ் ஜூனியர்ஸ் அணி 41 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கே.ஆர்.சி.சி., அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சய் 42 ரன்கள், கவுதம் 3விக்கெட் எடுத்தனர்.