/உள்ளூர் செய்திகள்/தேனி/ 2500 வாக்காளர் அடையாள அட்டைள் வினியோகம் 2500 வாக்காளர் அடையாள அட்டைள் வினியோகம்
2500 வாக்காளர் அடையாள அட்டைள் வினியோகம்
2500 வாக்காளர் அடையாள அட்டைள் வினியோகம்
2500 வாக்காளர் அடையாள அட்டைள் வினியோகம்
ADDED : செப் 02, 2025 03:43 AM
தேனி : மாவட்டத்தில் கடந்த மாதம் 2500 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைவினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. இதில் வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம், நீக்குதல், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு ஜூலை 1க்கு முன் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வனியோகம் நடந்து வருகிறது.
இதுபற்றி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: புதிதாக விண்ணப்பித்தவர்கள், முகவரி மாற்ற விண்ணப்பித்த சுமார் 2500 பேருக்கு கடந்த மாதம் வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 2300 புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வந்துள்ளன. அவற்றை வினியோகம் செய்யும் பணி துவங்கி உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றிற்கு தங்கள் பகுதி பி.எல்.ஓ.,க்கள் மூலம் அல்லது தேர்தல் இணைய பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.