/உள்ளூர் செய்திகள்/தேனி/பிப்.2 முதல் கோழி கழிசல் சிறப்பு மருத்துவ முகாம்பிப்.2 முதல் கோழி கழிசல் சிறப்பு மருத்துவ முகாம்
பிப்.2 முதல் கோழி கழிசல் சிறப்பு மருத்துவ முகாம்
பிப்.2 முதல் கோழி கழிசல் சிறப்பு மருத்துவ முகாம்
பிப்.2 முதல் கோழி கழிசல் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : பிப் 06, 2024 12:29 AM
கம்பம் : கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இரு வார கோழி கழிசல் நோய் தடுப்பு சிறப்பு முகாம்கள் பிப் . 2 முதல் துவங்கி உள்ளது.
கோடை காலத்தில் லேசான மழை பெய்து முடிந்தவுடன் கோழிகளுக்கு கழிசல் நோய் தாக்குவது வழக்கமாகும். நோய் பாதித்த கோழிகள் சரியாக தீவனம் உண்ணாது. கழிந்து கொண்டே இருக்கும். சோர்வாக காணப்படும். பின்னர் ஒரு சில நாட்களில் இறந்து போகும்.
வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை மருத்துவமனைகளில் கோழிக் கழிசல் தடுப்பூசி போடப்படுகிறது .
இது தவிர ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் ஆரம்பித்து இருவார தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் .
இந்தாண்டிற்கான இருவார கோழி கழிசல் சிறப்பு மருத்துவ முகாம் பிப்.2ல் துவங்கியது. ஒரு மருந்தகத்திற்கு 1400 டோஸ் கொடுத்துள்ளனர்.
தினமும் ஒரு கிராமம் சென்று தடுப்பூசி போடும் பணியை கால்நடை பராமரிப்புத் துறையினர் மேற்கொண்டு வருகிகின்றனர். இந்த முகாம் பிப். 15 வரை நடைபெறும் என்றும், கோழி வைத்துள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கால்நடை பராமரிப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.